search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் பலாத்கார வழக்கு"

    பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில போலீஸ் ஐ.ஜி. தயானந்தா விளக்கம் அளித்துள்ளார். #Nithyananda
    பெங்களூரு:

    தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரமத்தில் வைத்து பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010-ம் ஆண்டு நித்யானந்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராமநகர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நித்யானந்தா தனது ஆசிரமத்தில் இருந்து மாயமாகி உள்ளார். அவர் வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வருகிறது.

    இதுபற்றி கர்நாடக மத்திய மண்டல ஐ.ஜி. தயானந்தா கூறுகையில், ‘நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என நான் நினைக்கவில்லை. அவர் மீது முக்கிய வழக்கு ஒன்று கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காலாவதியான அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்க போலீஸ் சூப்பிரண்டு அனுமதி மறுத்தார். இதனால் அவர் சட்டத்துக்கு உட்பட்டு வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. அவர் வடஇந்தியாவில் இருக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். #Nithyananda
     
    பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #Nithyananda
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் மீது பெண் சீடர் ஆர்த்திராவ் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கு, கார் டிரைவர் லெனின் கருப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 8 வழக்குகள் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியார் தாக்கல் செய்த மனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகளை விசாரிக்க ராமநகர் மாவட்ட கோர்ட்டுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்பிறகு, நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி நடந்த விசாரணையின் போது ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் ஆஜராகி இருந்தார். அதன்பிறகு, 2 முறை நடந்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், நேற்றும் நித்யானந்தா சாமியார் மீதான வழக்குகள் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி கோபால கிருஷ்ணராய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வக்கீல், நித்யானந்தா சாமியார் வடமாநிலங்களில் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

    தொடர்ந்து 3 முறை நடந்த விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். நீதிபதியின் உத்தரவை அடுத்து நித்யானந்தா சாமியாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #Nithyananda
    பாலியல் பலாத்கார வழக்கில் பாதிரியார்களுக்கு முன்ஜாமீன் வழங்க இயலாது என கேரள ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார். #KeralaHighCourt #KeralaPriests
    கொச்சி:

    கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தின் மலங்கரா மரபுவழி திருச்சபையில் பாவ மன்னிப்பு கேட்க வந்த ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது” என்று குறிப்பிட்டார்.  #KeralaHighCourt #KeralaPriests #tamilnews

    ×